எழுவைதீவில் மகாஞானொடுக்கம்

aஎழுவைதீவு புனித தோமையார் ஆலய இறைமக்களுக்கான மகாஞானொடுக்கம் கார்த்திகை மாதம் 21ம் திகதி தொடங்கி மார்கழி மாதம் 21ம் திகதி வரை பங்குத் தந்தை அருட்திரு இராஜசிங்கம் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் அமலமரித்தியாகிகள் மறையுரைஞர் குழாம் அருட்திரு போல் நட்சத்திரம் (அமதி ) அடிகளாரின் தலைமையில் மிகவும் சிறப்பானமுறையில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் நடைபெற்ற மேய்ப்புப் பணி மாநாட்டின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக இல்லத்தரிசிப்பு, அன்பிய உருவாக்கல், சிறுவர் பெரியோர் இளையோர் கருத்தரங்குகள், பக்திச்சபைகள் உருவாக்கல், அன்பிய விருந்து, அருட்சதனங்கள் நிறைவேற்றல், நற்கருணைப்பவனி, குடும்ப உளஆற்றுப்படுத்துகை, ஆலயச் செயற்பாடுகளுக்குள் அனைவரையும் உள்வாங்குதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இறுதிநாள் நிகழ்வாக மறைமவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் புனித தோமையார் ஆலயத் திருநாள் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மகாஞானொடுக்க நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்னம் அருட்திரு போல் நட்சத்திரம் (அமதி) அடிகளாரால் திரை நீக்கம் செய்யப்பட்டது.b c d e f

Your email address will not be published. Required fields are marked *