யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் மாநாடு

IMG_018725.ஜீன்.2018. யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் இளையோர் ஆண்டை சிறப்பிக்கும் நிகழ்வாக ‘இறை திட்டம் தேடும் இளையோர் பயணம்’ என்ற தொனிப்பொருளில் ‘இளையோர் மாநாடு’ இம்மாதம் 22,23,24 ஆம் திகதிகளில் கிளிநொச்சி D7 இல் அமைந்துள்ள ஆரோபணம் இளையோர் இல்லத்தில் மறை மாவட்ட இளையோர் ஆணைகுழு இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்டீபன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் உள்ள ஆறு மறைக்கோட்டங்களிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான இளையோர்  கலந்து கொண்டனர். 22 ஆம் திகதி வெள்ளிகிழமை மாலை 6.30 மணிக்கு கொடியேற்றல் நிகழ்வுடன் ஆரம்பமான இம்மாநாடு 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜோசெப்தாஸ் ஜெபரட்னம் தலைமையில் நடைபெற்ற திருப்பலியுடன் நிறைவடைந்தது. இம்மாநாட்டில் சமகால இளையோரின் வாழ்வுடன் தொடர்புள்ள விடையங்களை உள்ளடக்கிய கருத்துரைகளும், குழு ஆய்வுகளும், கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன._MG_1413_MG_135120180623_173858 _MG_1169 _MG_1039 _MG_0800

Your email address will not be published. Required fields are marked *