19.மே ,2018. முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில், முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான நினைவுத் திருப்பலி 18.05.2018 மாலை 5.00 மணிக்கு யாழ்.மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. பா.யோ.ஜெபரட்ணம் தலைமையில் நடைபெற்றது. திருப்பலியில் இறந்துபோனவர்களுக்காக சிறப்பாக செபித்த குருமுதல்வர் , தனது மறையுரையில் முள்ளிவாய்க்கால் எல்லாம் முடிந்த இடம் அல்ல, பலரின் தியாகங்களினால் விடுதலைக்கான விதை விதைக்கபட்ட இடம். இயேசுவின் கல்வாரி மலை அனுபவத்தினூடான உயிர்ப்பின் நம்பிக்கைக்குள் எம்மை வழிநடத்தி செல்லும் இடம் என்று கூறினார். இத்திருப்பலியில் 15இற்கு அதிகமான குருக்களும் அருட்சகோதரிகளும் 100 இற்கும் அதிகமான மக்களும் கலந்துகொண்டார்கள்.
Previous
Next