நவ.20. யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவினால் கடந்த மாதம் நடத்தப்பட்ட தலைமைத்துவ பயிற்சியில் பங்குபற்றிய இளையோருக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மறைகல்வி நிலையத்தில் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்பணி. அன்ரன் ஸ்ரிபன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மறைகோட்ட முதல்வர் அருட்பணி. நேசராசா பிரதம விருந்தினராக கலந்துகொண்டு பயிற்சி பெற்ற இளையோருக்கான சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் தலைமைத்துவ பயிற்சி பெற்ற மாணவர்கள் கலை நிகழ்வுகளை நடத்தி இந்நிகழ்வை சிறப்பிதார்கள். இவருடம் உயர்தர பரீட்சையில் தேற்றிய 55 இளையோர் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Previous
Next