இலங்கை நாட்டிலுள்ள மக்கள் ஒற்றுமையாக வாழ விரும்புகின்றார்கள். அதற்காக ஏங்குகின்றார்கள் ஆனால் எமது அரசியல்வாதிகள் இப்படியான நல்லவை நடக்க இடமளியார். அவர்கள் தங்களுக்குள்ளே பிரிந்து நின்று பிரச்சனைகளை அதிகரிக்கின்றார்களென மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அருட்பணி டேவிட் கட்டத்திறப்பு விழாவில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தெரிவித்துள்ளார்.19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை பாடசாலை முதல்வர் திரு. சுவைனஸ் அவர்களின் தலைமையில் அருட்தந்தை டேவிட் அவர்களின் வழிநடத்தில்நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் புதிதாக அமைக்கபட்ட அருட்பணி டேவிட் கட்டத்தினையும் ஆசிர்வதித்து திறந்து வைத்து அங்கு ஆற்றிய உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தீவக வலயக்கல்வி பணிப்பாளர் திரு T. ஞானசுந்தரன் மற்றும் வடமாகாண பிரதிக் கல்வி பணிப்பாளர் திரு J. அன்ரனி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் ஆய்வுகூடத்திற்கான அடிக்கால் நாட்டும் நிகழ்வும் மற்றும் நூலகம், யாழ். மறைமாவட்ட ஆயரின் பெயர்கொண்ட கணனிக்கூட திறப்பு நிகழ்வுகளுடன் புனித போதுருவானவர் சிறப்பு பாடல் இறுவட்டு வெளியீடும் கலைநிகழ்வுகளும் இடம்பொற்றன.

By admin