கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை முன்னிட்டு சாவகச்சேரி புனித லிகோரியார் விளையாட்டுக் கழகத்தின் ஓழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட் விளையாட்டு நிகழ்வு 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு இடம்பெற்றது.

சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஞானதீபம் இளையோர் திறன் விருத்தி மைய இயக்குனர் அமலமரி தியாகிகள் சபையைச் சேர்ந்த அருட்திரு யூட் கரோவ் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள்மரியா மற்றும் எழுதுமட்டுவாழ் திருக்குடும்ப கன்னியர் மட குழும தலைவி அருட்சகோதரி றஜனி அந்தோனிப்பிள்ளை அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வு பங்குதந்தை அருட்திரு ஞானறூபன் அவர்களின் வழிநடத்தலில் சிறப்பாக நடைபெற்றது.

By admin