இலங்கை பல்சமய கருத்தாடல் சுகவாழ்வுச் சங்கமும் புனித டொன்பொஸ்கோ சலேசியன் துறவற சபையினரும் இணைந்து நடாத்திய வியாகுலப் பிரசங்கம் பாடல் போட்டி கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சலேசியன் பயிற்சிக்கூடத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் யாழ்ப்பாணம், உரும்பிராய், பாண்டியன்தாழ்வு, செம்பியன்பற்று, கொழும்புத்துறை ஆகிய பங்குகளிலிருந்து 50ற்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
இப்போட்டியில் கலந்து வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு 22ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை சலேசியன் பயிற்சிக்கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக சலேசியன் பயிற்சிக்கூட அதிபர் டிக்சன் பெர்னான்டோ அவர்களும் தாளையடி பங்குத்தந்தை அருட்திரு டியூக் வின்சன் அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.