யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாதசுந்தரன் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் ஞாயிறு தினங்களில் தனியார் கல்வி நிறுவனங்களின் கல்வி செயற்பாடுகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் சில நிறுவனங்கள் கல்வி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவற்றை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் திரு. செந்தூரன் மற்றும் திரு. கோபி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

By admin