யாழ். மாகாண அமலமரித் தியாகிகள் சபையின் புதிய மாகாணத் தலைவராக அண்மையில் நியமனம் பெற்ற அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் 17ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
யாழ். வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள தொடர்பக சிற்றாலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட இந்நிகழ்வில் கொழும்பு மாகாண அமலமரித் தியாகிகள் சபை முதல்வர் அருட்தந்தை றொசான் சில்வா, யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் மற்றும் திருக்குடும்ப யாழ். மாகாணத் தலைவி அருட்சகோதரி தியோபின் குருஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்கள் கடந்த காலங்களில் புனித பிரான்சிஸ்கு சவேரியார் பெரிய குருமடம், யாழ். பல்கலைக்கழகம், ஆசிரியர் கலாசாலை என்பற்றில் விரிவுரையாளராகவும் ஆன்மீக குருவாகவும் சேவையாற்றி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நோர்வே நாட்டில் மறைபரப்பாளராக பணியாற்றியவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
 

By admin