யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் குழுமத்தின் மறைபரப்பு சபை பொதுநிலையினருக்கான எழுச்சி வாரம் சிறப்பு நிகழ்வுகள் அமலமரித் தியாகிகள் சபையின் பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை சேவியர் அமல்ராஜ் அவர்களின் தலைமையில் 2 பிரிவுகளாக யாழ்ப்பாணத்திலும் மன்னாரிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணத்தில் கடந்த 16ஆம் திகதி சாட்டி சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு மாதகல், இளவாலை, வளன்புரம், வெண்புரவி நகர், சாட்டி ஆகிய இடங்களிலும் மன்னாரில் 18ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வு பேசாலை, கீரி, தாழ்வுபாடு, கீளியங்குடியிருப்பு, முத்தரிப்புத்துறை ஆகிய இடங்களிலும் நடைபெற்று வருகின்றது.
இந்நிகழ்வில் குடும்ப தரிசிப்புக்கள், ஒன்றுகூடல்கள், கருத்தமர்வுகள், கலந்துரையாடல்கள், மற்றும் கலைநிகழ்வுகள் என்பன இடம்பெறுவதுடன் 24ஆம் திகதி வருகின்ற வியாழக்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெறவுள்ள சிறப்பு ஒன்றுகூடலுடன் இவ் எழுச்சிவார நிகழ்வுகள் நிறைவுபெறவுள்ளன.

By admin