யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழு கூட்டம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பொதுநிலையினர் ஆணைக்குழு தலைவர் அருட்தந்தை மவுலிஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ரீதியாக இயங்கும் பக்திச்சபைகள் மற்றும் அமைப்புக்களின் இயக்குநர்களும் உறுப்பினர்களும் பங்குபற்றியதுடன் யாழ். மறைமாவட்ட குழுமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் கலந்து பொதுநிலையினர் ஆணைக்குழுவின் முக்கியத்துவம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் புதிய செயற்குழு உறுப்பினர்களுக்கான தெரிவும் இடம்பெற்றது.

By admin