
யாழ்.மறைமாவட்ட புனித மடுதீனார் சிறய குருமட திருவிழா நிகழ்வுகள் 12.11.2017 ஞாயிற்று கிழமை குருமட அதிபர் அருட்பணி. பாஸ்கரன் தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு திருநாள் திருப்பலி யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேனாட் ஞானபிரகாசம் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு குருமட மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் ‘The Blood in El Salvador’ என்ற, ‘எல் சல்வடோர்’ ஆயர் ரோமேரோ அவர்களின் உரிமைக்கான போராட்டத்தின் இரத்த சாட்சிய மரணம் நாடகமாக சிறப்பான முறையில் மேடையேற்றப்பட்டது. தொடர்ந்து மாலை வேளையில் சிறிய, பெரிய குருமட மனவர்களுகிடையிலும், குருக்கள், பெரிய குருமட மாணவர்களுக்கிடையிலும் உதைபந்தாட்ட போட்டிகளும் நடைபெற்றது. 











