யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணையத்தின் ஏற்பாட்டில் இயக்குனர் அருட்தந்தை தயாகரன் அவர்களின் தலைமையில் இளவாலை மறைக்கோட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட திருவழிபாடு சிறப்பு கருத்தமர்வு 11ஆம் திகதி சனிக்கிழமை இன்று பண்டத்தரிப்பு புனித பற்றிமா தியான இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இளவாலை மறைக்கோட்ட பங்குகளிலிருந்து பாடகர் குழாமினர், வழிபாட்டுக் குழுவினர், திரு இசை மீட்டுபவர்கள், திருப்பண்டக் காப்பாளர்களென 200 வரையானவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.
காலை 8.30 மணி தொடக்கம் மதியம் 1.00 மணிவரை நடைபெற்ற
இக்கருத்தமர்வில் திருவழிபாடு, திரு இசை தொடர்பான யாழ். மறைமாவட்டத்தின் தீர்மானங்கள், ஒழுங்குமுறைகள் போன்ற விடயங்களை அருட்தந்தையர்கள் கிறிஸ்தோப்பர், றெக்ஸ் சவுந்தரா, தயாகரன் ஆகியோர் இணைந்து தெளிவுபடுத்தினார்கள்.

 

 

 

By admin