தற்போதைய தனித்திருத்தல், சமூக இடைவெளி பேணுதல் போன்ற சூழ்நிலை காரணமாக யாழ். மறைவட்ட குருக்களின் வருடாந்த தியானம் இம்முறை இணைய வழியில் நடைபெற்றது. யாழ் மறைமாவட்டத்தின் 110 குருக்கள் தத்தம் பணித்தளங்களில் இருந்தவறே பங்கு கொண்ட இத்தியானம் நவம்பர் 9ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.

இத்தியானத்திற்கான அருள் உரைகளை பிரான்சிஸ்கன் சபைத் துறவியாகிய அருட்திரு. மத்தியு புரேயிடம் அவர்கள் மிகவும் சிறப்பாக வழங்கி குருக்களை ஆன்மீக முதிர்சிக்கு வழிநடத்தினார். யாழ் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் வழிநடத்தலிலும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களின் ஒழுங்குபடுத்தலிலும் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்விணைய வழி தியான நிகழ்வுகள் யாழ்.மறைவட்ட கத்தோலிக ஊடகத்தின் இயக்குநர் அருட்திரு அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் உதவியுடன் “யாழ் மறை அலை” இணைய தொலைக்காட்சி ஊடாக ஒளிபரப்பு செய்யப்பட்டன.

By admin