யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த அருட்தந்தை எமில் போல் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு 07ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
 
அருட்தந்தை அவர்களின் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து யூபிலி நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றன.
 
இந்நிகழ்வில் அருட்தந்தையின் குடும்ப உறவினர்கள், குருக்கள், துறவிகள், இறைமக்களெனப் பலரும் கலந்து கொண்டதுடன் அருட்தந்தையின் குருத்துவ யூபிலிதினத்தை நினைவுகூர்ந்து, “வழிநடந்த பயணப்பாதை சுவடுகள்” என்னும் மலரும் வெளியிடப்பட்டது.

By admin