யாழ். மறைக்கோட்ட இளையோர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோர்களுக்கான சிறப்பு கருத்தமர்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
மறைக்கோட்டஇளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை யாவிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்பெயின் நாட்டிலிருந்து வருகைதந்திருந்த அருட்தந்தை கீதபொன்கலன் அவர்கள் கருத்துரை வழங்கி நிகழ்வை நெறிப்படுத்தினார்.
இந்நிகழ்வில் 25 வரையான இளையோர் கலந்து பயனடைந்தனர்.