யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமடத்திருவிழா 13ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு நடைபெற்றது. குருமட அதிபர் அருட்தந்தை ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இவ்விழாவில் திருநாள் திருப்பலியை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் தலைமை தாங்கி ஒப்புக்கொடுத்தார். காலைத் திருப்பலியை தொடர்ந்து மதியம் நற்கருணை ஆராதானையும் மாலை விளையாட்டு நிகழ்வுகளும் அங்கு நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் குருமட மாணவர்க்ள குருக்கள் அருட்சகோதர்கள் ஆசிரியர்களென பலரும் கலந்து சிறப்பித்தனர்.

By admin