யாழ். பிராந்திய அமெரிக்கன் மிசன் சபையினரால் முன்னெடுக்கப்பட்ட பிள்ளைகள் விழா 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ். இரண்டாம் குறுக்குத்தெருவிலுள்ள அங்கிலிக்கன் சபை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டை தொடர்ந்து பிள்ளைகள் பவனியாக யாழ். மத்திய கல்லூரிக்கு சென்று அங்கு நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குபற்றினர்.
மத்திய கல்லூரியில் இச்சபையின் யாழ். பிராந்தி கல்விக்குழு இயக்குனர் சகோதரி சுதாசின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற திருமறை புதிர் போட்டியிலும் கலை நிகழ்விலும் பிள்ளைகள் கலந்துகொண்டதுடன் திருமறை புதிர் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.

By admin