யாழ். கோப்பாய் புனித மரியன்னை ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மொன்பேர்ட் அவர்களின் தலைமையில் 31ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். ஆயத்தநாள் வழிபாடுகள் 22ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வந்தநிலையில் 30ஆம் திகதி நற்கருனைவிழா இடம்பெற்றது.
நற்கருனைவிழா திருப்பலியை அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை வென்சஸ்லாஸ் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார். திருவிழா திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சொருப பவனியும் திருச்சொருப ஆசீரும் இடம்பெற்றது.
 

By admin