இலங்கை பிரதமர் யாழ் குடாநாட்டிற்கு மார்ச் மாதம் 20ஆம் திகதி வந்தபோது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் குறிப்பாகப் பெண்கள் தமது எதிர்பைச் சாத்வீகமான முறையில் வெளிப்படுத்த முயன்ற போது பொலீசாரினால் தாக்கப்பட்டமையும் அநாகரீகமாக நடத்தப்பட்டமையும் வன்மையாகக் கண்டித்து யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு கண்டன அறிக்கை ஓன்றை 28ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார்கள்.

இவ்வறிக்கையில் அமைதி வழிப்போராட்டத்தை வன்முறையாக அடக்கியமைக்கும், அச்சுறுத்தியமைக்கும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் இவர்கள் பயணித்த பேருந்துகள் வலுக்கட்டாயமாகப் பூட்டப்பட்டு, உள்ளிருந்தவர்கள் சுவாசிக்க முடியாதவாறு யன்னல்களும் இழுத்து மூடப்பட்டு அச்சுறுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி இவர்களின் நீண்ட கால நியாயமான போராட்டத்தின் மட்டில் அரசின் அசமந்த கண்டித்து நாடு முழுவதும் ஆட்சியாளர்களுக்கெதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்போது ஏன் வடக்கு கிழக்கில் இடம் பெறும் அமைதிவழிப்போராட்டங்கள் மட்டும் இரும்புக்கரங்களால் அடக்கப்படுகின்றன என கோள்வியெழுப்பியதுடன் ? இவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மேற்கொள்ளப்படவிருக்கும் அமைதிவழிப்போராட்டத்திற்கு தமது முழு ஆதரவையும் இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

By admin