யாழ் அகவொளி குடும்ப நல நிலையத்தால் பாடசாலை மாணவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு இம்மாதம் 7ஆம் திகதி வியாழக்கிழமை மண்டைதீவு றோ.கா பாடசாலையில் நடைபெற்றது.
மாணவர்களின் தலைமைத்துவ மேம்பாட்டை நோக்காக கொண்டு நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் தரம்11ல் கல்வி பயிலுகின்ற 25ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கருத்துரைகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
அகவொளி நிலைய இயக்குனர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை அதிபர் சேவியர் சுவைனஸ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் வளவாளரக அமலமரி தியாகிகள் சபை அருட்தந்தை சுதர்சன் அவர்கள் கலந்து நிகழ்வை வழிப்படுத்தினார்.

By admin