யாழ்ப்பாண மறைமாவட்டத்தை சேர்ந்த கிளறீசியன் சபை திருத்தொண்டர்களான ஆன்றோய் அரவிந், டொனால் கிறிஸ்டி மற்றும் ஜோன்சன் ஆகியோர் 16ம் திகதி கடந்த புதன்கிழமை குருக்களாக திருநிலைப் படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் இவர்கள் குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இப்புதிய குருக்களுக்கு யாழ் மறை அலை தொலைக்காட்சி குழுமத்தினராகிய நாம் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.