யாழ்ப்பாணம் புனித மடுத்தினார் சிறிய குருமடத்தில் கிறிஸ்து பிறப்பு விழா நிகழ்வு 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை குருமட அதிபர் அருட்திரு ஜெயறஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

மாலை 6 மணிக்கு அங்கு நடைபெற்ற நிகழ்வில் யாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் பியந்த லியனகே அவர்களும் லயன்ஸ் கழகங்களின் சில பிரதிநிதிகளும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் லயன்ஸ் கழகத்தினர் குருமட மாணவர்களுக்கு அன்பளிப்புக்கள் வழங்கியதுடன் குருமட மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
அத்துடன் யாழ்ப்பாண பொலிசாரால் ஒழுங்குபடுத்தப்பட்ட சிரமதான பணி புனித மடுத்தினார் குருமடத்தில் 19ஆம் திகதி நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களினான் ஆரம்பித்துவைக்கப்பட் இச்சிரமதானப்பணியில் புனித பத்திரிசியார் கல்லூரி, புனித சென்யோன்ஸ் கல்லூரிகளின் ஸ்கவுட்ஸ் குழுவினர், யாழ் மானகரசபையினர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்கள் மற்றும் குருமட மாணவர்கள் இணைந்து செயற்பட்டனர். இதன்போது பிரதான வீதியையொட்டிய குருமடத்தின் முன்பக்க மதிலிலுள்ள கறைகள், அழுக்குகள் சுறண்டப்பட்டு மீண்டும் பொலிசாரால் வர்ணம் பூசப்பட்டதுடன் இநிகழ்விற்கு லயன்ஸ் கழகம் Nescafe நிறுவனம், Anni sea food என்பன தமது உதவிகளை வழங்கியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin