யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டப் பங்கிலுள்ள புனித வின்சன் டி போல் சபையின் கிறிஸ்து அரசர் பந்தி உறுப்பினர்கள் கொழும்புத்துறை புனித சூசையப்பர் மூதாளர் இல்லத்திற்கு சென்று அங்கு வாழ்ந்துவரும் வயோதிபர்களுடனான சந்திப்பொன்றை 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பில் மூதாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் நிகழ்வுகளை மேற்கொண்டு அவர்களுடன் உணவருந்தி தோழமை உணர்வை வெளிப்படுத்தினார்கள். இந்நிகழ்வில் கொய்யாத்தோட்டப் பங்கின் பீடப்பணியாளர்களும் மரியகொறற்றி சபையினரும் இணைந்து கொண்டனர். இந்நிகழ்வு கொய்யாத்தோட்டப் பங்குதந்தை அருட்திரு ஆனந்தகுமார் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் இடம்பெற்றது.

By admin