முழங்காவில் பங்கிலுள்ள மாணவர்களுக்கான ஒருநாள் கருத்தரங்கு கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி நாகபடுவான் புனித வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் கற்றல் பற்றிய விழிப்புணர்வு கருத்துரைகளும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அப்பகுதியில் வாழும் அனைத்து மதங்களையும் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். யாழ். சாள்ஸ் பொரோமியே நற்பணி மன்றத்தினர் இந்நிகழ்விற்குரிய அனுசரணையை வழங்கியிருந்தனர். அத்துடன் முழங்காவில் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால யாத்திரை 11ஆம் 12 ஆம் திகதிகளில் இரணைதீவு புனித வேளாங்கன்னி ஆலயத்தில் இடம்பெற்றது. 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிலுவைப்பாதை தியானமும் அதனைத் தொடர்ந்து நற்கருணை வழிபாடும் அங்கு நடைபெற்றது. இவ்வழிபாடுகளை உடுவில் பங்குதந்தை அருட்திரு லியோ ஆம்ஸ்ரோங் அவர்கள் வழிநடத்தினார். 12ஆம் திகதி சனிக்கிழமை காலை கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு யேசுதாஸ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் அங்கு இடம்பெற்றது. தவக்கால யாத்திரையில் 800க்கும் அதிகமான இறைமக்கள் கலந்து கொண்டனர். மேலும் முழங்காவில் இரணைதீவு புனித வேளாங்கன்னி சிற்றாலயம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் இறைமக்களின் உதவியுடன் மீண்டும் புனரமைக்கப்பட்டு 12ஆம் திகதி கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி மறைகக்கோட்ட முதல்வர் அருட்திரு யேசுதாஸ் அவர்களினால் ஆசிர்வதித்து திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுகள் அனைத்தும் முழங்காவில் பங்குத்தந்தை அருட்திரு பத்திநாதன் அவர்களின் வழிநடத்தலில் சிறப்பான முறையில் நடைபெற்றன.

By admin