2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகளில் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நினைவேந்தல் நிகழ்வில் குருக்கள், துறவிகள், பொதுமக்களென பலரும் கலந்து உணர்வுபூர்வமாக இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

By admin