கட்சி மோதல்களும் மதங்களுக்கு இடையிலான பிரிவினை முயற்சிகளும் முள்ளிவாய்க்கால் தியாகங்களை கொச்சைப்படுத்த நாம் அனுமதிக்ககூடாது என யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் ஆலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் திருப்பலி மறையுரையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முள்ளிவாய்க்கால்வரை நடைபெற்ற யுத்தத்தில் இறந்து போன ஆயிரக்கணக்கான மக்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக செபிக்கின்ற அதேவேளையில் இவர்களுடைய தியாகங்கள் வீண் போகாமல் இருக்க நாம் அனைவரும் ஒற்றுமையோடு உழைக்க வேண்டுமெனவும் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்எப்போதும் இல்லாதவாறு தற்போது அரசியல் கட்சிகள் இடையே போட்டிகளும் வேற்றுமைகளும் அதே வேளையில் மதங்களுக்கு இடையே பிரிவினைகள் ஏற்படுத்தும் சக்திகளும் தலைவிரித்து ஆடுகின்றபடியினால் இத்தியாகங்கள் கொச்சைப்படுத்தப்பட்டு பலன் கொடுக்காமல் போகும் ஆபத்து உள்ளதெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

By admin