கனடா மொன்றியல் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகமான மீட்பின் அன்னை மறைத்தளத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமமாகிய ஒதியமலை கிராம மக்களுக்கான ஒரு தொகுதி உலர் உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு கடந்தமாதம் 26ஆம் திகதி ஒதியமலை கிராமத்தில் நடைபெற்றது.

அளம்பில் பங்குத்தந்தை அருட்திரு யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அளம்பில் புனித அந்தோனியார் ஆலய இளையோர் மன்றத்தினர் மற்றும் ஒதிய மலைக் கிராம சேவையாளரின் உதவியோடும் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. கனடா மொன்றியல் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இந்நிதியுதவி கடந்த ஆனி மாதத்திலே புனித அன்னம்மாள் திருவிழாவைக்கொண்டாடிய மக்களினால் வழங்கப்பட்டிருந்தது. ஒதியமலை கிராமம் முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லையேரமாக அமைந்துள்ளதுடன் 1984ம் ஆண்டு இக்கிராமத்திலே இராணுவத்தினரால் கூட்டத்திற்கென அழைத்துச்செல்லப்பட்ட அனைத்து ஆண்களும் படுகொலை செய்யப்பட்டமையும் இங்கு நினைவுகூரத்தக்கது.

By admin