தர்மபுரம், பெரியகுளம், பிரமந்தநாறு உழவனூர் பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட நூறு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 01ஆம் திகதி கடந்த செவ்வாய்கிழமை தர்மபுரம் புனித சவேரியார் ஆலயத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்திரு நிக்சன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்புத்துறை புனித சவேரியார் குருமடத்தில் உருவாக்குனராக பணியாற்றிவரும் அருட்திரு ரவிராஐ அவர்களும் சமூக ஆர்வலர் செல்வன் திவ்வியன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இதற்கான நிதி அனுசரணையை அவுஸ்ரேலியாவில் வாழ்ந்துவரும் ஓருவர் வழங்கியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin