மாணவர்களின் ஆளுமை திறன் மற்றும் தலைமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் அகவொளி குடும்பநல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட கருத்தமர்வு 14ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் அருட்தந்தை மைக்மயூரன் அவர்களின் தலைமையில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை டேவிட் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித் தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை சுதர்சன் மற்றும் சல்வற்றோறியன் சபையை சேர்ந்த அருட்தந்தை நிர்மல் ஆகியோர் வளவாளர்களாக கலந்து மாணவர்களை நெறிப்படுத்தினர்.

இந்நிகழ்வில் 55 வரையான மாணவர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.

By admin