மல்வம் புனித திருக்குடும்ப ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 
கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 1ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை அருட்தந்தை திருமகன் அவர்களும் திருநாள் திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களும் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தனர்.
 
திருவிழா திருப்பலி நிறைவில் திருநாளை சிறப்பிக்கும் முகமாக ஆயத்தநாள் வழிபாடுகளில் ஆற்றப்பட்ட மறையுரைகளை அடிப்படையாக கொண்டு முன்னெடுக்கப்பட்ட வினாவிடை போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.
 
தொடர்ந்து திருச்சொருப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன. மேலும் அன்று மாலை திருநாளை சிறப்பிக்குமுகமாக முன்னெடுக்கப்ட்ட கலைநிகழ்வுகளும் விளையாட்டுக்களும் பங்குத்தந்தையின் தலைமையில் அங்கு நடைபெற்றன.

By admin