மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அன்பிய சிறப்பு நிகழ்வு கடந்த மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகி பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் தலைமையில் சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றது.
 
மூன்று வாரங்கள் நடைபெறவுள்ள இவ் அன்பிய சிறப்பு நிகழ்வுகளை யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களும் அவருடன் இணைந்த வளவாளர்களும் அருட்சகோதரர்களும், அருட்சகோதரிகளும் வழிநடத்துவதோடு இந்நிகழ்வுகளில் மக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றிவருகின்றனர்.
 
31ஆம் திகதி திங்கட்கிழமை அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கும் அன்பிய வளவாளர்களுக்குமான கருத்தமர்வு நடைபெற்று ஆரம்பிக்கப்பட்ட இச்சிறப்பு நிகழ்வில் வலயங்களுக்கிடையிலான அன்பிய பகிர்வு, அன்பிய திருப்பலிகள், இல்லத்தரிசிப்புக்கள், மறைக்கல்வி மாணவர்கள், இளையோர்கள், பெரியோர்களுக்கான அன்பிய கருத்தமர்வுகள் என்பன இடம்பெற்று வருகின்றன.
 
அத்துடன் இக்காலங்களில் அன்பிய கள தரிசிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு இறுதியில் சிறப்பு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

By admin