????????????????????????????????????

மே,07,2018. யாழ்ப்பாணம் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த மாநாடு நேற்றையதினம் (மே,06,ஞாயிற்றுக்கிழமை) பாதுகாவலன் மண்டபத்தில்,  மறைமாவட்ட பொதுநிலையினர் கழக  இயக்குநர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது .  நிகழ்வின் ஆரம்பத்தில் காலை 9.30 மணிக்கு  புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர்  தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது.  தொடர்ந்து பாதுகாவலன் மண்டபத்தில் கொடியேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.  இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த  யாழ்ப்பாணம்  மறைமாவட்ட  ஆயர் பேரருட்திரு யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை,  தனது உரையில் பொதுநிலையினர் திருச்சபையில்   ஆற்றவேண்டிய பணிகளை  சுட்டிகாட்டி, இதனை உணர்ந்து பொதுநிலையினர் மறைமாவட்ட நிர்வாக பணிகளிலும்  ஈடுபட முன்வரவேண்டும் என்ற  அழைப்பைவிடுத்தார். இந்நிகழ்வில் கடந்த   காலங்களில் பொதுநிலையினர் கழகத்தால் நாடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியாவர்களுக்கான பரிசில்கள்   வழங்கப்பட்டதுடன்  கலை நிகழ்வுகளும் நடைபெற்றன. யாழ்ப்பாணம் மறைவட்டத்தில் உள்ள எல்லா மறைக்கோட்டங்களில்  இருந்தும்  பொதுநிலையினர் கழக அங்கத்தவர்களும்  இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்._DSC0454

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

????????????????????????????????????

By admin