யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட ‘மறைமாவட்ட அன்பிய நாள்’ சிறப்பு நிகழ்வு 07ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சிறப்பு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து கலை நிகழ்வுகள் அங்கு இடம்பொற்றன.

இந்நிகழ்வில் கடந்த காலங்களில் யாழ் மறைமாவட்ட அன்பிய இயக்குனராக பணியாற்றிய கிளரீசியன் சபையைச் சேர்ந்த அருட்தந்தை மில்பர்வாஸ் அவர்களுக்கான பிரிவுபசார நிகழ்வும் இடம்பெற்றது. யாழ். மறைமாவட்ட குருமுதல்வர், மறைக்கோட்ட முதல்வர்கள், அன்பிய இணைப்பாளர்கள், ஊக்குவிப்பாளர்கள் மற்றும் இறைமக்கள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தார்கள்.

By admin