பருத்தித்துறை மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள பலாலி ஊறணி பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
தீவக மறைக்கோட்டத்தில் அமைந்துள்ள சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்திற்கு யாத்திரையாக சென்ற இவர்கள் கரம்பன் பங்கிலுள்ள பழமை வாய்ந்த ஆலயங்களையும் மற்றும் யாழ், மடுத்தீனார் சிறிய குருமடத்தையும் தரிசித்தார்கள். இந்நிகழ்வு ஊறணி பங்குதந்தை அருட்திரு தேவராஜன் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் சிறப்பாக நடைபெற்றது.