மருதமடு அன்னைக்கு முடிசூட்டப்பட்ட நூற்றாண்டு விழாவுடன் இணைந்த அன்னையின் ஆடி மாத திருவிழா கடந்த 1ஆம்இ 2ஆம் திகதிகளில் மன்னார் மடு திருத்தலத்தில் நடைபெற்றது.

1ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வுகளில் காலை திருப்பலிகளும் தொடர்ந்து தபால் முத்திரை வெளியீடும் மாலைத் திருப்புகழ்மாலைஇ நற்கருணை ஆரதானையுடன் இணைந்த பவனி என்பவற்றுடன் நூற்றாண்டு நினைவு மலர் வெளியீடு மற்றும் மடுத் திருத்தலத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அழகிய தோற்றத்துடன் அமைந்த திருத்தல குவிமாட திறப்பு விழா என்பனவும் நடைபெற்றன.

திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற முத்திரை வெளியீட்டு நிகழ்வில் தபால் மா அதிபர் திரு. ரூவன் சத்குமார அவர்களினால் மடு அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட விசேட முத்திரை வெளியிடப்பட்டு மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் நினைவு மலர் வெளியீட்டில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்கள் நினைவு மலரை வெளியிட்டுவைக்க அவரிடமிருந்து பேரருட்தந்தை மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டதுடன் புதிதாக அமைக்கப்பட்ட திருத்தல குவிமாடத்தையும் ஆசீர்வதித்து
திறந்துவைத்தார்.

தொடர்ந்து 2ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மருதமடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் திருவிழா திருப்பலி நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை பேரருட்தந்தை மல்கம் கர்தினால் ரஞ்சித் அவர்கள் தலைமைதாங்கி ஏனைய ஆயர்களுடன் இணைந்து ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலி நிறைவில் அன்னையின் திருச்சுருப பவனியும் ஆசீரும் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் இலங்கையின் பலபாகங்களிலிருந்தும் வருகைதந்திருந்த பெருந்திரளான மக்கள்இ குருக்கள் துறவிகள், அரச உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து மருதமடு அன்னையின் ஆசீரை பெற்றுச்சென்றனர்.

By admin