மரியாயின்சேனை நூற்றாண்டு விழா யாழ் மரியன்னை பேராலயத்தில் 6ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

யாழ் மறைமாவட்ட மரியாயின் சேனை ஆன்மீகக்குரு அருட்திரு றெஜி ராஜேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நூற்றாண்டு விழா நிகழ்வில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்கள் தலைமை தாங்கி விழாத்திருப்பலியை ஓப்புக்கொடுத்தார். இவர் தனது மறையுரையில், சேனையின் பாதுகாவலராக முதன் முதல் யோசேப்பு இருக்கின்றார் என்று கைந்நூல் சுட்டிக்காட்டுவதை குறிப்பிட்டு, நாம் புனித மரியாளுடன் இணைந்து புனித யோசேப்பின் அடைக்கலத்தை நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்ள வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார். திருப்பலியை தொடர்ந்து மரியாயின் சேனையினருக்கான நூற்றாண்டுவிழா ஓன்றுகூடல் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

By admin