மன்னார் மறைமாவட்ட குருக்களுக்கான வருடாந்த தவக்காலத் தியானம் கடந்த 18ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரை மன்னார் மடு தியான இல்லத்தில் நடைபெற்றது.

மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானத்தை வின்சென்சியன் சபையை சேர்ந்த அருட்தந்தை மைக்கல் ராஜப்பிள்ளை அவர்கள் நெறிப்படுத்தினார்.

70 வரையான குருக்கள் இத்தியானத்தில் பங்குபற்றியிருந்தனர்.

By admin