மன்னார் மறைமாவட்ட கரித்தாஸ் வாழ்வுதய சமூக அறநெறி நிறுவனத்தின் புதிய இயக்குநராக அருட்தந்தை அருள்ராஜ் குருஸ் அவர்கள் கடந்த 30ஆம் திகதி சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்ணான்டோ அவர்களின் முன்னிலையில் அருட்தந்தை அவர்கள் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன் வாழ்வுதய முன்னாள் இயக்குநர் அருட்தந்தை அன்ரன் அவர்களுக்கான பணி கௌரவிப்பும் இந்நிகழ்வில் இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம், அருட்தந்தையர்கள், நிறுவன பணியாளர்கள் என பலரும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர். அத்துடன் மன்னார் மறைமாவட்ட சமூக தொடர்பு அருட்பணி நிலையத்தின் புதிய இயக்குநராக அருட்தந்தை டக்ளஸ் மில்ரன் லோகு அவர்கள் கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்ணாட்டோ அவர்களால் நியமனம் பெற்று பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் மற்றும் நிறுவன முன்னாள் இயக்குநர் அருட்தந்தை செல்வநாதன் பீரிஸ் மற்றும் நிறுவன செயற்குழு உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

By admin