மன்னார் மருதமடு அன்னையின் திருத்தல ஆடிமாத திருவிழாவுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் மன்னார் மாவட்ட அரசஅதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் 12 ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில்நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்களும் மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களும், திணைக்கள தலைவர்கள், பாதுகாப்பு தரப்பினரென பலரும் கலந்துகொண்டனர். மடுத்திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதாரம், மருத்துவம், குடிநீர், போக்குவரத்து, உணவு, பாதுகாப்பு பற்றிய விடயங்கள் இதில்கலந்துரையாடப்பட்டதுடன் இம்முறை மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆடி மாத திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 2ஆம் திகதி காலை 6:15 மணிக்கு மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.1924ஆம் ஆண்டு ஆயர்கள் இனணந்து முருதமடு அன்னைக்கு முடிசூட்டி வைத்தார்கள்.
இம்முடிசூட்டு விழாவின் நூற்றாண்டு யூபிலி பெருவிழாவாக 2024ஆம் ஆண்டு ஆடிமாதம் சிறப்பிக்கப்படும் திருவிழா அமையவுள்ள நிலையில் வருகின்ற 2ஆம் திகதி திருநாளன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்கள் யூபிலி ஆண்டை பிரகடணம் செய்து ஆரம்பித்து வைப்பார் எனவும் தொடர்ந்து திருச்சொருப பவனியின் பின் மருதமடு அன்னையின் ஆலயமுன் மண்டபத்தில் யூபிலி கொடி ஏற்றிவைக்கப்பட்டு மன்னார் மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் யூபிலி நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை கிறிஸ்துநாயகம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

By admin