மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பேரருட்தந்தை இராயப்பு ஜோசப் அவர்களின் நினைவாக மன்னார் ஜோசப்வாஸ் நகரில் அமைந்துள்ள நற்கருணைநாதர் ஆலய வளாகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுவந்த நூலக கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்புவிழா 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பங்குத்தந்தை அருட்தந்தை ராஜநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை இம்மானுவேல் பெர்னான்டோ அவர்கள் கலந்து புதிய நூலகத்தை ஆசீர்வதித்து திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், பங்குமக்களென பலரும் கலந்து கொண்டனர்.

By admin