கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனத்தின் சர்வ மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி நிகழ்வு 19ம் திகதி கடந்த சனிக்கிழமை உருத்திரபுரம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

கிளி முல்லை பங்குகளின் 21 அணிகள் பங்கு பற்றிய இப்போட்டியில் குமுழமுனை, புதுக்குடியிருப்பு, கிளிநொச்சி, கூழாமுறிப்பு ஆகிய அணிகள் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளுக்கு தெரிவாகின. இறுதிப்போட்டியில் கிளிநொச்சி புதுக்குடியிருப்பு அணிகள் மோதி கிளிநொச்சி பங்கு அணி முதலாம் இடத்தைப் பெற்று கிண்ணத்தை கைப்பற்றி கொண்டது. இரண்டாம் இடத்தினை புதுக்குடியிருப்பு பங்கு அணியும் மூன்றாம் இடத்தினை கூழாமுறிப்பு பங்கு அணியினரும் பெற்றக்கொண்டனர். கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன இயக்குனர் அருட்திரு செபஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்னம் அவர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தார். அத்துடன் கிளிநொச்சி மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு யேசுதாஸ் அவர்களும் முல்லை மறைக்கோட்ட முதல்வர் அருட்திரு அன்ரனிப்பிள்ளை அவர்களும் ஏனைய பங்குகளின் பங்குத்தந்தையர்களும் நிறுவனப்பணியாளர்களும் மற்றும் அணியினரின் ஆர்வலர்களும் இந்நிகழ்வில் இணைந்திருந்தார்கள்.

By admin