அல்லைப்பிட்டி வெண்புரவிநகர் மக்களின் பன்முக, சமூக வளர்ச்சிக்காக மண்கும்பான் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கேட்போர் கூடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அக்கட்டட திறப்பு விழா கடந்த 11ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.
வெண்புரவி நகர் நிறுவனர் அருட்தந்தை அமிர்த ஜெயசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து புதிய கட்டடத்தை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மக்கள் கலந்துகொண்டனர்.

By admin