மணியந்தோட்டம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு 24ஆம் திகதி சனிக்கிழமை மணியந்தோட்டம் கர்த்தர் ஆலயத்தில் நடைபெற்றது.
மறைக்கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் மணியந்தோட்டம் பங்குத்தந்தை அருட்தந்தை அற்புதறாஜா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் 80 வரையான மாணவர்களும் மறையாசிரியர்களும் கலந்து கொண்டதுடன் கருத்துரைகளும் குழுவிளையாட்டுக்களும் அனுபவ பகிர்வுகளும் இடம்பெற்றன.

By admin