அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ‘போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் கத்தோலிக்கம்’ என்னும் நூல் வெளியீட்டு நிகழ்வு 21ஆம் திகதி சனிக்கிழமை யாழ். மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிளறேசியன் சபை பிராந்திய முதல்வர் அருட்தந்தை ஜெயசீலன் அவர்கள் நூலை வெளியிட்டு வைக்க யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு. புஸ்பரெட்ணம் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் பொதுமக்களெனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன்
போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் கத்தோலிக்கம் பற்றி வெளியிடப்பட்ட முதல் ஆய்வியல் நூல் இது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin