யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பொதுநிலையினர் மாநாடு கடந்த 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமலமரித் தியாகிகள் சபை யாழ். மாகாண முதல்வர் அருட்தந்தை ஜெயந்தன் பச்சேக் அவர்களின் தலைமையில் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும் தொடர்ந்து யாழ். புனித மரியன்னை பேராலய ஆயர் யஸ்ரின் மண்டபத்தில் மாநாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் கடந்த ஆண்டிற்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன்அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜெகன்குமார் அவர்களால் இறைவேண்டல் ஆண்டை மையப்படுத்திய சிறப்புரை வழங்கினார்.
அத்துடன் நீண்டகால பொதுநிலை சீடத்துவப் பணிகளுக்காக புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயப் பங்குத் திருஅவையைச் சேர்ந்த திரு.மரியான் சூசை முத்து அவர்கள் ஆயர் எமில் ஞாபகார்த்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், பொதுநிலையினர்களெனப் பலரும் கலந்துகொண்டனர்.

By admin