பூநகரி பள்ளிக்குடா புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் தலைமையில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
21ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்த நாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 24ஆம் திகதி காலை பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. பங்குத்தந்தை அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 10 சிறார்கள் முதல்தநன்மை அருட்சாதனம் பெற்றுக்கொண்டனர். அன்று மாலை நற்கருணைவிழா இடம்பெற்றதுடன் நற்கருணை விழா திருப்பலியை அருட்தந்தை சுதர்சன் அவர்கள் தலைமைதாங்கிஒப்புக்கொடுத்தார்.
திருவிழா திருப்பலியை அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை சத்தியசீலன் அவர்கள் தலைமைதாங்கி நிறைவேற்றினார். தொடர்ந்து அன்று மாலை புனிதரின் திருச்சொருபவனியும் ஆசீர்வாதமும் இடம்பெற்றன.