யாழ்ப்பாணம் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் தனிநாயகம் தமிழ் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் விழா 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை புனித பிரான்சிஸ்கு சவேரியார் குருத்துவக் கல்லூரியின் ஜோய் கிறிசோஸ்ரம் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட மடுமாதா சிறிய குருமட அதிபர் அருட்திரு கிறிஸ்து நேசரெட்ணம் – தமிழ்நேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். தமிழ் விழாவின் நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக திருமறைக் கலாமன்றத்தின் பிரதி இயக்குனர் திரு. யோன்சன் றாஜ்குமார் அவர்களினால் நெறியாள்கை செய்யப்பட்டு அருட்சகோதரர்களினால் ஆற்றுகைசெய்யப்பட்ட ‘யோசேப்பின் இதயம்;’ என்னும் புனித வளனாரின் வாழ்வை சித்தரிக்கும் குறியீட்டு நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்நிகழ்வுகள் அனைத்தும் தனிநாயகம் தமிழ் மன்ற காப்பாளர் அருட்திரு நெவின்ஸ் யோகராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

By admin