யாழ் மாகாண அமலமரிதியாகிகள் துறவறசபையில் இணைந்து உருவாக்கம் பெற்று தற்போது இல்லறத்தில் இணைந்த பொதுநிலை அங்கத்தவர்களை கொண்டு உருவாக்கப்பட்ட புனித இயுயின் மைந்தர்கள் குழுமத்தின் ஓன்றுகூடல் 16ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை சுவாமியார் வீதியில் அமைந்துள்ள டி மசனட் இறையியலகத்தில் இடம்பெற்றது.

இக் குழுமத்திற்கு பொறுப்பாக பணியாற்றிவரும் அமலமரிதியாகிகள் துறவறசபையை சேர்ந்த அருட்திரு அருள் சுதர்சன் அவர்களின் தலைமையில் 3.30 மணியளவில் நடைபெற்ற இவ் ஓன்றுகூடல் நிகழ்வில் விளையாட்டுக்கள் கருத்துப்பகிர்வுகள் வாழ்க்கை அனுபவங்கள் என்பவற்றுடன் தங்களுடைய உருவாக்க காலத்தில் இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் தங்கள் குடும்ப வாழ்வின் மகிழ்ச்சியபன தருணங்ள் என்பவற்றை அருட்சகோதரர்களோடு பகிர்ந்து கொண்டனர் இவ் ஓன்றுகூடல் நிகழ்வில் பல்வேறு இடங்களில் வருகைதந்த 30ற்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

By admin