புதிய குருக்களுக்கான திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலி 13ஆம் திகதி இன்று சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
இத்திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த திருத்தொண்டர்களான அன்ரன் கஜீஜ்காந்த், மற்றும் கமல்ராஜ், அமலமரித்தியாகிகள் சபையை சேர்ந்த திருத்தொண்டரான ஜேம்ஸ் இராஜஜெனிஸ்ரன் மற்றும் சொமஸ்கன் சபையை சேர்ந்த திருத்தொண்டரான அந்தோனிமுத்து அனுஜன் ஆகியோரே புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர்கள் அர்ப்பணிப்புடன் பணிவாழ்வில் நிலைத்திருந்து இறை பணியாற்ற நல்வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றோம்.

By admin